ADDED : ஆக 18, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அருகே மனைவி, மகனைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி கிருத்திகா, 24; இவர்களுக்கு ரித்திஷ், 3; என்ற மகன் உள்ளார். கிருத்திகா நேற்று முன்தினம் தனது மகனுடன் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.