/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாநில கூட்டம்
/
பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாநில கூட்டம்
பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாநில கூட்டம்
பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க மாநில கூட்டம்
ADDED : ஆக 08, 2024 11:23 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் 14ம் ஆண்டு மாநில பேரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட தலைவர் சேதுராமன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் செங்குட்டுவன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். மாநில தலைவர் மூக்கையா சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் அபரஞ்சி ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் ராஜகோபாலன் 2023-24ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
விழுப்புரம் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கள்ளக்குறிச்சி டி.ஆர்.ஓ., சத்யநாராயணன், விழுப்புரம் மாவட்ட கருவூல அலுவலர் ராமச்சந்திரன், கூடுதல் கருவூல அலுவலர் அருட்செல்வம், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர்கள் சுந்தர்ராஜன், சங்கரலிங்கம் வாழ்த்திப் பேசினர்.
மாநில துணைத் தலைவர்கள் பாலசுப்ரமணியன், கோபால், விவேகானந்தம், மாயகிருஷ்ணன், சுப்பிரமணியம் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். மாநில தலைமையிட செயலாளர் தர்மலிங்கம், அமைப்பு செயலாளர் கப்ரியல், இணைச்செயலாளர் ராஜ்குமார், சண்முகம், மூர்த்தி கோரிக்கை விளக்கி பேசினர்.
கூட்டத்தில் தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.