/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் இலவச நீட் பயிற்சி நிறைவு
/
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் இலவச நீட் பயிற்சி நிறைவு
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் இலவச நீட் பயிற்சி நிறைவு
இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் இலவச நீட் பயிற்சி நிறைவு
ADDED : மே 05, 2024 06:07 AM

விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் இலவச நீட் கிராஷ் பயிற்சி நிறைவு விழா நடந்தது.
விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த இலவச நீட் கிராஷ் பயிற்சியில் இப்பகுதி மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்து 250 மாணவ, மாணவிகள் பயின்றனர். இந்த பயிற்சி வகுப்பை இ.எஸ்., கல்விக்குழும தலைவர் செல்வமணி, துவக்கி வைத்தார். . 42 நாட்கள் நடந்த இப்பயிற்சி வகுப்பு கடந்த மே 2ம் தேதி முடிவடைந்தது.
இதன் நிறைவு விழாவிற்கு, தலைவர் செல்வமணி தலைமை தாங்கி, நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் கூறினார். செயலர் பிரியா செல்வமணி, தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் பற்றி கூறினார்.
இதில், இ.எஸ்., பொறியியல் கல்லுாரி முதல்வர் இந்திரா, துணை முதல்வர் ஆண்டூரூஸ், சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.