ADDED : ஜூன் 05, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி வகுப்பு நடந்தது.
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்த பயிற்சியை, மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி மற்றும் வங்கி மேலாண் இயக்குநர் தயாளன் துவக்கி வைத்து பேசினர்.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு இ.ஆர்.பி., மென்பொருள் வாயிலாக கணக்குகள் கையாள்வது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
வங்கி முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்பிரபு மற்றும் பொது மேலாளர் விநாயகமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
