/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுப்ரமணியசுவாமி கோவிலில் வாயிற்படி பிரதிஷ்டை
/
சுப்ரமணியசுவாமி கோவிலில் வாயிற்படி பிரதிஷ்டை
ADDED : ஆக 12, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் 3 நிலை ராஜகோபுரத்திற்கு வாயிற்படி பிரதிஷ்டை நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. திருமுருகன் தலைமையில் கலச பிரதிஷ்டை செய்து, சிறப்பு வேள்வியும், வாயிற்படிகளுக்கு சிறப்பு பூஜையும் செய்து, பிரதிஷ்டை செய்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, பேரூராட்சி சேர்மன் மொக்தியார், செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

