/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீயணைப்பு வாகனத்திற்கு ஷெட் அமைக்கும் பணி
/
தீயணைப்பு வாகனத்திற்கு ஷெட் அமைக்கும் பணி
ADDED : மே 13, 2024 05:50 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்தில் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் தீயணைப்பு வாகனத்திற்கு ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த இடம் இல்லாததால், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. அங்கு ஷெட் இல்லாமல், வாகனம் வெளியே வெயில் மற்றும் மழையில் நனைந்து வீணாகியது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தினர், தீயணைப்பு வாகனம் நிறுத்துவதற்கு ஷெட் அமைத்து தர முன் வந்தனர்.
தொடர்ந்து, தீயணைப்பு நிலைய வீரர்கள் தாங்களே தீயணைப்பு வண்டிக்கு ஷெட் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
தீயணைப்பு நிலையத்திற்கு அரசு சார்பில் சொந்த இடம் ஒதுக்கீடு செய்து, அங்கு தீயணைப்பு நிலையம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.