/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி அரசு கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு
/
செஞ்சி அரசு கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு
செஞ்சி அரசு கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு
செஞ்சி அரசு கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு
ADDED : மே 30, 2024 05:18 AM

செஞ்சி: செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.
செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன.
பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 40 மாணவர்களும் மற்ற பிரிவில் தலா 50 மாணவர்கள் என மொத்தம் 240 மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு ஆன் லைன் மூலம் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் மாற்று திறனாளிகளுக்கான 12 இடங்களுக்கும், விளையாட்டுத்துறையினருக்கான 7 இடத்திற்கும், தேசிய மாணவர் படையினருக்கான ஒரு இடத்திற்கும் கலந்தாய்வு நடந்தது.
கல்லுாரி முதல்வர் லலிதா, தேர்வு குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், ஆண்டனி ஜெயராஜ் மற்றும் துறைத்தலைவர்கள் இந்த கலந்தாய்வில் இடம் பெற்று தகுதியான மாணவர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லுாரியில் இணைவதற்கான அணையை உடனடியாக வழங்கினர். மீதம் உள்ள இடங்களுக்கான பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 10ம் தேதி துவங்க உள்ளது.
இதில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இ.மெயில் மூலம் அழைப்பு அனுப்பி நேர்காணல் நடத்தி சேர்க்கை நடைபெற உள்ளது.