/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் ஆலோசனைக் கூட்டம்
/
திண்டிவனத்தில் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 09, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில், தமிழ்ச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, திண்டிவனம் தமிழ்ச்சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்க செயலாளர் ஏழுமலை, ராமலிங்கம், தனுஷ்கோடி, நேஷனல் பள்ளி தலைமையாசிரியர் மோகன்தாஸ், ஆண்டாள் நாச்சியார் சபை பாண்டியன், எம்.டி.கிரேன் பள்ளி தலைமையாசிரியை மேரி வினோதினி, விவசாயிகள் சங்கம் கடவாம்பாக்கம் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 29ம் தேதி பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகளை நடத்தி கொண்டாடுவது. திண்டிவனத்தில் உள்ள அவரது சிலையை புனரமைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

