/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடை கால குடிநீர் பிரச்னை தீர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்
/
கோடை கால குடிநீர் பிரச்னை தீர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்
கோடை கால குடிநீர் பிரச்னை தீர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்
கோடை கால குடிநீர் பிரச்னை தீர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்
ADDED : மே 01, 2024 01:40 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக, குடிநீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளை கண்டறிந்து, குடிநீர் இருப்பு குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஏரிகள், குளங்கள், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக்கிணறுகள் உள்ள பகுதிகளை கண்டறிந்தும், நீர் இருப்புத் தன்மை குறித்தும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தற்போது, மாவட்டத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் தங்குதடையின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மின் துறையின் சார்பில், கோடைகாலம் நிலவி வருவதால் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளவும், சீரான முறையில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின்மோட்டார்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் வசதி போன்ற புகார்கள் வரும் பட்சத்தில், அப்பகுதிகளுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக சென்று, குடிநீர் தொடர்பான உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள், கோடைகாலத்தினை குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.
கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மோகன், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, நகராட்சி கமிஷனர் ரமேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் விக்னேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.