
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் மா.கம்யூ., சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மா.கம்யூ., நகர செயலாளர் குமரேசன் தலைமை தங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட பொருளாளர் இன்பஒளி, காங்., ஜெய்கணேஷ், ம.தி.மு.க., சங்கர், வி.சி., இமயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ராமதாஸ் நகரில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
திண்டிவனத்தில் ஏரி, குளங்களுக்கு வருகின்ற நீர்வரத்து கால்வாய்களை ஆழப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.