
விழுப்புரம்: கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் கோலியனுாரில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் பெரியசாமி, ஆனந்தராஜ், பனமலைப்பேட்டை, உமையாள்புரம் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் கணேசன், பஞ்சமாதேவி சங்க தலைவர் கலிவரதன், செயலாளர்கள் பாலாஜி, தணிகைவேல், கோவிந்தசாமி, பொருளாளர் ரமேஷ், துணை செயலாளர் முருகேசன் நாடார் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, மகளிர் அணி அமைப்பாளர் பூங்கொடி சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் கோலியனுார், பனமலைப்பேட்டை, உமையாள்புரம், பஞ்சமாதேவி ஆகிய கிராமங்களில், கோவிலுக்கு சம்மந்தம் இல்லாத சொத்துகளை, தவறுதலாக மாற்றப்பட்ட யூ.டி.ஆர்.,ஐ நீக்கம் செய்து, பட்டா வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் பழைய அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியறுத்தப்பட்டன.