/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
/
விழுப்புரத்தில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரத்தில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரத்தில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 30, 2024 11:46 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் தொழில் துவங்கி பயன்பெற வேண்டும் என்றால், வங்கிகள் தயக்கமின்றி திறந்த மனதோடு, இளைஞர்களின் தொழில் திட்டங்களுக்கு நிதிக்கடன் வழங்க முன்வர வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், கடந்த நிதியாண்டில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரை, சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டதோடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் களுக்கான கடன் போதுமான அளவு வழங்கப்பட்ட வங்கிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.