/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : ஏப் 18, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் காய்கறிகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அவலுார்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதி கிராம விவசாயிகளிடமிருந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை வாங்கிக்கொண்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள குடோனுக்கு கன்டெய்னர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.
லாரியை பண்ருட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் அன்பழகன், 24; ஓட்டினார்.
மதியம் 3:30 மேல்மலையனுார் சாலை வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
அவலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

