ADDED : ஜூலை 15, 2026 05:21 PM
வானுார்: வானுார் அருகே விவசாய நிலத்தில் காப்பர் ஒயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், ஆலங்குப்பம் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் மாதவன், 48; சிவில் கான்ட்ராக்டர். இவருக்கு, வானுார் அடுத்த ராயப்புதுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பேட்டையில் விவசாய இடம் உள்ளது. அங்கு வாழை மரம் மற்றும் சிறு பயிர்களை நடவு செய்துள்ளார். இதற்காக தனது இடத்தில் போர்வெல் அமைத்து, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.
நேற்று விவசாய நிலத்திற்கு சென்றபோது, ஸ்டோர் ரூம் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த காப்பர் ஒயர்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம். இது குறித்து ஆரோவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
