ADDED : ஜூலை 24, 2026 03:53 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: திருமண மண்டபத்தில் ‘ஏசி’யில் இருந்த காப்பர் கம்பியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், சுதாகர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 28; விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இந்த மண்டபத்தில் இருந்த ‘ஏசி’யில் இருந்த 6 கிலோ காப்பர் கம்பியை திருடிய வழுதரெட்டியைச் சேர்ந்த மணிகுமார் மகன் பாலாஜி, 19; சிவமூர்த்தி, 31; ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்தனர்.
