ADDED : ஜூலை 01, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் மார்க்கெட் கமிட்டி எதிரே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் - செஞ்சி ரோடு, மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள எம்.ஜி.நகர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோஷணை போலீசார் நேற்று காலை 8:00 மணியளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், 31; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 10 லிட்டர் சாராயம் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.