ADDED : மே 23, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.
விக்கிரவாண்டி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 65; விவசாயி.
இவர், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் தனது பசுமாட்டை கட்டியிருந்தார்.
அப்போது பெய்த மழை காரணமாக மின்னல் தாக்கியதில், பசுமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
தகவலறிந்த வி.ஏ.ஓ., ராஜா, நேமூர் கால்நடை மருத்துவர் சுந்தரேசன் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.