/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாடு குறுக்கே வந்ததால் கார் விபத்து: 4 பேர் காயம்
/
மாடு குறுக்கே வந்ததால் கார் விபத்து: 4 பேர் காயம்
ADDED : ஆக 24, 2024 06:59 AM
விழுப்புரம்: சென்னை அடுத்த கோவூரைச் சேர்ந்தவர் விவேகானந்தன் மனைவி சாந்தி, 62; மறைமலைநகர் கம்பன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி மீனால், 52; வளசரவாக்கம் சவுந்தரி நகரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 80; ஆகியோர் நேற்று சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றனர்.
காரை மறைமலை நகரைச் சேர்ந்த வெங்கடேசன் ஓட்டிச்சென்றார். கார், நேற்று காலை விழுப்புரம் அடுத்த பிடாகம் பாலம் அருகே சென்றபோது, குறுக்கே மாடு வந்ததால், காரை இடதுபுறமாக டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது சாலையோர தடுப்புக்கட்டையில் கார் மோதியது. இதில் படுகாயமடைந்த சாந்தி உள்ளிட்ட 4 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.