/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் கிரிக்கெட் போட்டி
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் கிரிக்கெட் போட்டி
ADDED : ஜூலை 01, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
போட்டியில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி பரிசு வழங்கினார்.
முதல் இடம் பிடித்த ஒதியத்துார் கிரிக்கெட் அகாடமி அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த மேல்பாப்பாம்பாடி அணிக்கு 5,000 ரூபாயும், மூன்றாமிடம் பிடித்த ஸ்ரீரங்கபூபதி பார்மசி கல்லுாரி அணிக்கு 3,000 ரூபாயும் பரிசு வழங்கப்பட்டது.
உடற்கல்வி இயக்குனர்கள் காசிநாதன், கோமதி, சைலஜா, விஜயலட்சுமி, சித்ரா ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.