/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
/
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மார் 06, 2025 03:26 AM

செஞ்சி: அ.தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் ஜெ., பிறந்த நாள் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 மாதமாக தனியார் கல்லுாரியில் நடந்தது. 50க்கும் மேற்பட்ட அணியினர் விளையாடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கும் விழா செஞ்சியில் நடந்தது.
இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜ் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைத் தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் சண்முகம், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், விநாயகமூர்த்தி, நடராஜன், புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் அருண்ராஜ், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர், பேரூராட்சி கவுன்சிலர் அகல்யா வேலு, பொதுக்குழு உறுப்பினர்கள் மனோகரன், சுலோசனா ஜெயபால் பங்கேற்றனர்.