/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சைபர் கிரைம் புகார் எண் 1930 இணைப்பு கிடைக்காமல் பொது மக்கள் அவதி
/
சைபர் கிரைம் புகார் எண் 1930 இணைப்பு கிடைக்காமல் பொது மக்கள் அவதி
சைபர் கிரைம் புகார் எண் 1930 இணைப்பு கிடைக்காமல் பொது மக்கள் அவதி
சைபர் கிரைம் புகார் எண் 1930 இணைப்பு கிடைக்காமல் பொது மக்கள் அவதி
ADDED : செப் 11, 2024 01:24 AM
தமிழகத்தில் இணையதள குற்றங்கள் குறித்து புகார் செய்வதற்கான 1930 என்ற தொலைபேசி எண்ணை பல முறை தொடர்பு கொண்டாலும் இணைப்பு கிடைக்காததால் பொது மக்கள் விரக்தியடைகின்றனர்.
ஆன்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துவோரிடம் மோசடியாக பேசி வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுரண்டுவது தற்போது இணைய தளங்களில் உலா வர துவங்கியுள்ளது.
இதற்கென உள்ள சில மென்பொருட்களை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்தி படித்தவர்கள், அப்பாவிகள் வரை பலருக்கும் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநுாலில் எதேனும் ஒரு பரப்பான திட்டம், செய்தியை லிங்க் மூலம் அனுப்பி அதன் மூலம் இணைய தளத்தில் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் இன்ஸ்டாகிராம் 'வாட்ஸ் ஆப்' போன்றவற்றை ஹேக் செய்து அடையாளத் திருட்டு என்ற குற்ற செயல்கள் மூலம் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கையகப்படுத்துவது, பயன்படுத்துவது, பண மோசடி செய்வது, மிரட்டுவது, மனஉலைச்சளுக்கு ஆளாக்குவது, துன்புறுத்துவது, இழிவுபடுத்துவது என சைபர் கிரைம் குற்றங்களை அதிக அளவில் செய்து வருகின்றனர்.
இது போன்ற நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எங்கே புகார் செய்வது என தெரியாமல் குழப்பத்திற்கு ஆளாகி இருந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்டம் தோறும் சைபர் கிரைம் குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவை தமிழக அரசு உருவாக்கியுள்து.
அத்துடன் குற்றங்கள் நடக்கும் போது பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணையும் அறிவித்துள்ளனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த எண்ணை ஆங்காங்கே விளம்பரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக போதிய விபரங்களுடன் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் செய்தால், புகாரை பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சைபர் கிரைம் அலுவலத்திற்கு புகாரை பார்வேட் செய்கின்றனர். அங்குள்ள சைபர் கிரைம் போலீசார் இதன் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கின்றனர்.
தற்போது இணையதள மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் நுாற்றுக்கணக்கில் புகார்கள் பதிவாகிறது. இதனால் தமிழக அரசின் ஹெல்ப் லைன் எண்ணான 1930க்கு தொடர்பு கொண்டால் உடனடியாக இணைப்பு கிடைப்பதில்லை. சில நேரம், எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் இணைப்பு கிடைக்காமல் பொது மக்கள் விரக்தியடைகின்றனர்.
கிராமப் புறங்களில் பாதிக்கப்படும் நபர்கள் நெட் சென்டர்களுக்குச் சென்று இணையதளத்தில் புகார் செய்வதற்கும், மாவட்ட தலைநகரங்களுக்கு சென்று புகார் அளிக்கவும் கால தாமதம் ஏற்படுகிறது. இதற்குள் பாதிக்கப்பட்டர்களுக்கு மேலும் இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
எனவே, தமிழக காவல் துறை 1930 ஹெல்ப் லைன் புகார்களை பதிவு செய்வதற்கு கூடுதல் ஆட்களை நியமித்து அனைத்து புகார்களையும் பதிவு செய்ய போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.