ADDED : ஜூலை 17, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த தாதாம்பாளையத்தைச் சேர்ந்த சீனுவாசன் மகன் கபில்நாத் அவினாஷ்சுனில், 27; விவசாயி. இவரது பெரியப்பா ஸ்ரீகாந்த், 52; இவர்களுக்கு, அருகருகே நிலம் உள்ளது. கடந்த 12ம் தேதி, ஸ்ரீகாந்த் அவரது நிலத்தில், வரப்பை வெட்டி வேலை செய்தார்.
அப்போது, கபில்நாத் அவினாஷ்சுனிலின் நிலத்துக்குச் செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் பைப் உடைந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், கபில்நாத் அவினாஷ்சுனிலுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.