
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கார் மோதி மான் இறந்தது.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு வயலில் இருந்து வந்த மான் வழுதாவூர் கூட்ரோடு அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்றது. அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலயே இறந்தது.
விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று, இறந்த மானை கைப்பற்றி, திண்டிவனம் வன சரக அலுவலர் மணியிடம் ஒப்படைத்தனர்.