/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மறு பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம்
/
மறு பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம்
மறு பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம்
மறு பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம்
ADDED : மே 24, 2024 06:00 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மறு பிரேத பரிசோதனை செய்த தொழிலாளி உடலை மீண்டும் ஒப்படைக்க தாமதப்படுத்துவதாக பொது நல அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விழுப்புரத்தில் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் ஆசீர்வாதம், சுகுமாறன், ரமேஷ், பாலமுருகன் ஆகியோர் கூறியதாவது: விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் சமையல் தொழிலாளி ராஜா, 43; கடந்த மாதம் 10ம் தேதி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற நிலையில் மரணமடைந்தார்.
சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி அஞ்சு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின்படி கடந்த 22ம் தேதி ராஜாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைத்து, சென்னை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவக்குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில், உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. உடலை ஒப்படைப்பது மருத்துவக்கல்லுாரி டீனின் பொறுப்பாகும். ஆனால், கலெக்டர் தலையிட்டு, உடலை ஒப்படைக்க தாமதப்படுத்துகிறார்.
இந்நிலையில் கலெக்டர், ராஜாவின் மனைவிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மறு பிரேத பரிசோதனைக்கு பின், கோர்ட்டில் வழக்கு தொடர உத்தேசித்துள்ளீர்களா என கேட்டுள்ளார்.
இது பாதிக்கப்பட்டவரின் சட்ட உரிமையில் தலையீடு செய்வதாகும். அதற்கு, ராஜாவின் மனைவி அஞ்சு பதில் கடிதமும் கொடுத்துள்ளார். ஆனாலும், ராஜாவின் உடல் ஒப்படைக்கவில்லை.
எனவே, உடலை உடனடியாக ஒப்படைத்து, அடக்கம் செய்ய கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். தாமதப்படுத்தினால், அஞ்சு சார்பில் ஐகோர்ட்டில் முறையிட்டு, அடக்கம் செய்யும் நடவடிக்கை எடுப்போம் என்றனர்.