/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உயர்த்தப்பட்ட சுங்கவரியை ரத்து செய்ய வலியுறுத்தல்
/
உயர்த்தப்பட்ட சுங்கவரியை ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2024 12:03 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், மாவட்ட அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரேம்நாத் வரவேற்றார், பொருளாளர் கலைமணி ஆண்டறிக்கை வாசித்தார். செயல் தலைவர் மோகன், மேலாண்மைக் குழு ராஜேஷ், தலைமை நிலைய செயலாளர் முகமது அக்பர்அலி, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் நிர்மல், துணைத் தலைவர்கள் முபாரக்அலி, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மண்டல தலைவர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.