நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் முற்போக்கு மகளிர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சக்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். இடு பொருட்களுக்கான மானியத்தை குறைக்கக் கூடாது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு துணை போகக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

