/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சி.இ.ஓ., அலுவலகத்தில் துறை இயக்குனர் ஆய்வு
/
சி.இ.ஓ., அலுவலகத்தில் துறை இயக்குனர் ஆய்வு
ADDED : மே 26, 2024 05:32 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மன் திடீர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று காலை 10.00 மணிக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மன் திடீரென ஆய்வு செய்தார்.
இவர், சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்து முடிந்த தேர்வுகளின் விபரம் சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார். தேர்வு முறைகேடு சம்பந்தமாக தனக்கு வந்த புகார்கள் சம்பந்தமாகவும், சம்பந்தபட்ட கல்வித்துறை அலுவலர்கள், தேர்வு மைய அலுவலர்களை அழைத்து விசாரித்துள்ளார்.
மேலும், அரசின் விலையில்லா சீருடைகள் தயார் செய்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் எந்தளவில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.
தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மன், இங்குள்ள சில பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை நியமிப்பது சம்பந்தமாக, எழுந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.