/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலில் சொருகிய 9 எலுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம் எடுத்த பக்தர்கள்

ADDED : மார் 27, 2024 12:44 AM

திருவெண்ணெய்நல்லுார்:விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள ரத்தினவேல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் 25ம் தேதி நள்ளிரவு இடும்பன் பூஜை நடந்தது. இதில், திருவிழா துவங்கியது முதல் ஒன்பது நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட ஒன்பது எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன.
நாட்டாண்மை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் வேலில் சொருகிய எலுமிச்சை பழம் 50,500 ரூபாய்க்கும், இரண்டாம் நாள் பழம், 26,500, மூன்றாம் நாள் பழம்42,100 ரூபாய் என ஒன்பது நாள் பழங்களும், 2 லட்சத்து 36,100 ரூபாய்க்கு ஏலம் போயின.
கடந்த ஆண்டு ஒன்பது எலுமிச்சை பழங்கள் 80,300 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் ஈர ஆடை அணிந்து வந்து, எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்துச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இக்கோவிலில், ஏற்கனவே ஏலத்தில் எலுமிச்சை பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர்.