/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஆக 31, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று காலை 8:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி அரசரடி விநாயகர், காசி விஸ்வநாதர் கோபுர கலசங்களுக்கும், தொடர்ந்து, திரவுபதி அம்மன் கோவில் கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.
யாகசாலை பூஜை மற்றும் அபிேஷகங்களை முன்னுார் சரவண குருக்கள் செய்திருந்தார். திரளான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து வீதியுலாவும் நடந்தது.