/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் டி.ஐ.ஜி., - எஸ்.பி., நேரில் ஆய்வு
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் டி.ஐ.ஜி., - எஸ்.பி., நேரில் ஆய்வு
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் டி.ஐ.ஜி., - எஸ்.பி., நேரில் ஆய்வு
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் டி.ஐ.ஜி., - எஸ்.பி., நேரில் ஆய்வு
ADDED : ஏப் 20, 2024 05:57 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், 1,966 ஓட்டுச்சாவடிகளில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்தது. எஸ்.பி., தீபக்சிவாச் தலைமையில், 2,050 போலீசார், 300 ஆந்திர மாநில ஊர்காவல் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல், நேற்று காலை 11:00 மணி முதல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பதற்றமான விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி ஓட்டுச்சாவடியில் ஆய்வு செய்து, பாதுகாப்பு பணி குறித்து எஸ்.பி., தீபக் சிவாச்சிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். இதே போல், விழுப்புரம் வழுதரெட்டி, விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில், டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.