/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பொறியியல் கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி முகாம்
/
அரசு பொறியியல் கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி முகாம்
அரசு பொறியியல் கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி முகாம்
அரசு பொறியியல் கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி முகாம்
ADDED : ஆக 23, 2024 07:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியில் கல்லுாரியில் ஏ.ஐ.சி.டி.இ. (அட்டல்) பயிற்சி மையம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அன்டு பேகல்டி டெவலப்மென்ட் புரோகிராம் பயிற்சி முகாம் துவங்கி நடந்து வருகிறது.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்தார். பேராசிரியர் அருட்செல்வன் துவக்கிவைத்தார்.
கணினி பொறியியல் துறை தலைவரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான ரீகன் வரவேற்றார். சென்னை அண்ணா பல்கலை., உறுப்பு கல்லுாரிகளின் இயக்குநர் ஹரிஹரன் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ன் தேவையும், அதன் இன்றியமையாமை குறித்தும், எதிர்காலத்தில் மார்க்கெட்டிங் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விளக்கி பேசினார்.
இந்த பயிற்சி முகாமில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். தொடர்ந்து, 24ம் தேதி வரை இந்த பயிற்சி முகாம் நடக்கிறது.
பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளர் இயந்திரவியல் துறை தலைவர் வேல்முருகன், நன்றி கூறினார்.