ADDED : மே 01, 2024 01:56 AM

வானுார், : கிளியனுார் திரவுபதியம்மன் கோவில் பிரமோற்சவத்தையொட்டி, தீமிதி திருவிழா நடந்தது.
கிளியனுார் மெயின் ரோட்டில் திரவுபதி அம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது.
இதையொட்டி, அன்று அரக்கு மாளிகை உற்சவமும், 25ம் தேதி பக்காசூரசனை சம்ஹாரம் செய்தல், 26ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக 27ம் தேதி கரக உற்வமும், 28 ம் தேதி மாடு விரட்டுதல் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு கோவில் எதிரில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள், தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் சக்ரபாணி எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று கூத்தாண்டவருக்கு மாங்கல்யம் கட்டுதல் நடந்தது. இன்று 1ம் தேதி கூத்தாண்டவர் சுவாமி திருத்தேர் மற்றும் நாளை 2ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிளியுனுார் கிராம மக்கள் செய்துள்ளனர்.