/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் - கிருஷ்ணகிரி, வி.கே.டி., சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை மத்திய அமைச்சரிடம் பா.ம.க., எம்.எல்.ஏ., மனு
/
திண்டிவனம் - கிருஷ்ணகிரி, வி.கே.டி., சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை மத்திய அமைச்சரிடம் பா.ம.க., எம்.எல்.ஏ., மனு
திண்டிவனம் - கிருஷ்ணகிரி, வி.கே.டி., சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை மத்திய அமைச்சரிடம் பா.ம.க., எம்.எல்.ஏ., மனு
திண்டிவனம் - கிருஷ்ணகிரி, வி.கே.டி., சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை மத்திய அமைச்சரிடம் பா.ம.க., எம்.எல்.ஏ., மனு
ADDED : செப் 13, 2024 06:11 AM
விக்கிரவாண்டி: வி.கே.டி., சாலை மற்றும் திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலை பணிகளை விரைந்து முடிக்க மத்திய அமைச்சரிடம் மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., மனு கொடுத்துள்ளார்.
மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார், மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து கொடுத்த மனு விபரம்:
விக்கிரவாண்டி - கும்பகோணம்-தஞ்சாவூர் என்.எச்.45-சி சாலையை மேம்படுத்தும் பணியில் 'நகாய்' ஈடுபட்டுள்ளது. இப்பணி கடந்த 2018 மற்றும் 2020ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் பணிகள் முடிக்கப்படவில்லை.
இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதற்கு பதிலளித்த திட்ட இயக்குனர், குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முடிக்கப்படும் என பதிலளித்தார்.
கடந்த ஏப்.2024 வரை, விக்கிரவாண்டி-சேத்தியாதோப்பு வரையில் 65.96 கி.மீ., துாரத்திற்கு 47.85 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி-சேத்தியாதோப்பு சாலை பணியில் எவ்வித முன்னேற்றம் இல்லாததால் கடந்த 24.06.2024ல் ஒப்பந்ததாரரை நீக்கி, அறிவிப்பை நகாய் வெளியிட்டது .
சாலை பணிகளை முறையாக செய்யாததால் சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில், பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலையில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கிடப்பில் போடப்பட்டுள்ள விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணி முடியும் வரை இந்த சாலையில் பயணிக்க விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையே 174 கி.மீ., சாலையில் 9 வெவ்வேறு நகரங்களிலிருந்து பைபாஸ் சாலைகள் இணைகின்றன. புதுச்சேரி - பெங்களூர் செல்லும் பயணிகள், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பகுதியில் இருந்து யாத்திரீக பயணம் செல்வோர் இச்சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். நான்கு மணி நேரத்தில் சென்றடைய கூடிய துாரத்தை கடக்க 8 மணி நேரம் ஆகிறது.
இச்சாலையில் மாதந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வாகன விபத்தில் இறக்கின்றனர். கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இச்சாலை பணியை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

