/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் ஜமாபந்தி; பொதுமக்கள் ஏமாற்றம்
/
திண்டிவனத்தில் ஜமாபந்தி; பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : ஜூன் 19, 2024 01:12 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில், நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமத்தின் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டது.
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி ஜாமபந்தி நிகழ்ச்சி துவங்கியது. நேற்று இரண்டாவது நாளாக நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். தாசில்தார் சிவா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜமாபந்தியில் தீவனுார் குறுவட்டத்தைச் சேர்ந்த ஆசூர், கொள்ளார், விழுக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களின் கணக்குகள் பார்க்கப்பட்டது.
வழக்கமாக ஜமாபந்தியின் போது, பொது மக்களிடமிருந்து பட்டா மாற்றம், முதியோர் ஓய்வு தொகை, ரேஷன் கார்டு விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக பெறப்படும்.
ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பது தெரியாமல், நேற்று திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக வந்திருந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது குறித்து எடுத்துக் கூறியதன் பேரில், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்