/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் 'மிஸ்சிங்' முதல்வர் பிறந்த நாளில் ஏமாற்றம்

ADDED : மார் 03, 2025 11:55 PM
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் என்றாலே ஆளும் கட்சியின் மத்தியில் அமைச்சர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் என போட்டி போட்டுக் கொண்டு கொண்டாடுவர்.
அன்றைய தினத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து மகிழ்வர். இந்த ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க.,வினர் யாரும் மோதிரம் அணிவிக்க வரவில்லை. இதனால் மோதிரம் கிடைக்கும் என எதிர்பார்த்த பிரசவித்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்து சென்றதால் அதிகளவில் செலவு ஆகிவிட்டதால் கட்சி பிரமுகர்கள் கப்சிப்பென முதல்வர் பிறந்த நாளை ஆரவாரம் இன்றி கொண்டாடினர்.
மேலும் புதிதாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதால் யார் எப்படி செலவு செய்கின்றனர் என ஒருவரை ஒருவர் பார்த்து யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்காமல் மவுனம் காத்தனர். இந்த ஆண்டு பொதுமக்களுக்கு முதல்வர் பிறந்த நாள் விழா ஏமாற்றத்திலேயே கடந்தது.