/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பில் நோய் கட்டுப்பாடு செயல் விளக்க கூட்டம்
/
கரும்பில் நோய் கட்டுப்பாடு செயல் விளக்க கூட்டம்
ADDED : ஜூலை 30, 2024 11:47 PM
திருவெண்ணெய்நல்லுார் : தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்துறை மற்றும் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் கரும்பில் நோய் மற்றும் பூச்சி கட்டுபாட்டு செயல் விளக்க கூட்டம் நடந்தது.
சிறுமதுரை ஊராட்சி தலைவர் கோபாலசுந்தரம் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் அனிதா வரவேற்றார்.
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் முத்து மீனாட்சி, கடலுார் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சசிகுமார் சிறப்புரையாற்றினர்.
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் வில்லியம் அந்தோணி, கரும்பில் அதிக மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும், கூடுதல் லாபம் பெற ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும் எனவும் பேசினார்.
மேலும், கரும்பில் பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை குறித்தும், கரும்பிற்கு மண்ணில் தேவைப்படும் சத்துக்கள் பற்றியும் விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், நுண்ணுயிர் பாசன திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத் தப்பட்டது.