/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'டோக்கனுக்கு' கவனிப்பு துவங்கியது; குறைத்து கொடுப்பதால் அதிருப்தி
/
'டோக்கனுக்கு' கவனிப்பு துவங்கியது; குறைத்து கொடுப்பதால் அதிருப்தி
'டோக்கனுக்கு' கவனிப்பு துவங்கியது; குறைத்து கொடுப்பதால் அதிருப்தி
'டோக்கனுக்கு' கவனிப்பு துவங்கியது; குறைத்து கொடுப்பதால் அதிருப்தி
ADDED : ஏப் 24, 2024 03:03 AM
ஆரணி லோக்சபா தொகுதியில், தேர்தலுக்கு முன் டோக்கன் கொடுக்கப் பட்டவர்களுக்கு கவனிப்பு துவங்கினாலும், டோக்க னுக்கு 100 ரூபாய் கொடுப்பதால் டோக்கன் பெற்றவர்கள் மத்தியில் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆரணி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் தொகுதிக்குட்பட்ட மயிலம், செஞ்சி உட்பட 6 சட்டசபை தொகுதியில், தி.மு.க., நிர்வாகிகள் மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம், நுாற்றாண்டு விழா லோகோவுடன் கூடிய டோக்கன் பூத் வாரியாக வழங்கப்பட்டது.
டோக்கனுக்கு தேர்தல் முடிந்த பிறகு கவனிப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் வரை கவனிப்பு நடத்தவில்லை. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, பூத் வாரியாக ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனுக்கு தலா 100 ரூபாய் கொடுக்கும் பணி நேற்று துவங்கியது.
டோக்கனுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 100 ரூபாய் வழங்கி வருவது, டோக்கன் பெற்றவர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-