/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு ' தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு ' தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
அரசு பள்ளி மாணவிகளுக்கு ' தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
அரசு பள்ளி மாணவிகளுக்கு ' தினமலர் -பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஆக 07, 2024 05:40 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். இன்ஜினியர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.உதவி தலைமை ஆசிரியை சிவகாமி வரவேற்றார்.
விழுப்புரம், எஸ்.ஆர் .எஸ்., பிராப்பர்டீஸ் நிர்வாக இயக்குனர் ராஜலட்சுமி சுரேஷ்குமார் பள்ளி மாணவிகளுக்கு தினமலர் பட்டம் இதழை வழங்கி பேசியதாவது; மாணவர்களுக்கு தேவையான உலகின் விஞ்ஞான வளர்ச்சி, வரலாறு உள்ளிட்ட கல்விவளர்ச்சிக்கு தேவையான செய்திகளை பட்டம் இதழ் வழங்குகிறது.மாணவிகள் இதழினை படித்து எதிர்காலத்தில் போட்டித்திறன் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
பள்ளி ஆசிரியைகள் விஜயகுமாரி, ஷமினா பேகம், கிரேஸி நிர்மலா, கல்விக்குழு ராஜா உள்ளிட்ட மாணவிகள் பலர் பங்கேற்றனர்.