/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி தேர்தல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்
/
விக்கிரவாண்டி தேர்தல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்
விக்கிரவாண்டி தேர்தல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்
விக்கிரவாண்டி தேர்தல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்
ADDED : ஜூன் 27, 2024 11:45 PM
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி இன்று முதல் வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கப்பட உள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் தகவல் சீட்டை சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும்.
இந்த பணியை இன்று முதல் துவங்கி வரும் ஜூலை 4ம் தேதி நிறைவு செய்ய வேண்டும் என அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று முதல் தினமும் கண்காணித்து, தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.