ADDED : மே 31, 2026 04:41 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ரெட்டி நலச்சங்கம் சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழா தலைவர் ராமமூர்த்தி சங்க கொடியேற்றினார். சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கனகவள்ளி, ருக்குமணி, மல்லிகா, கல்யாணி, பிரமிளா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். மாவட்ட ரெட்டி நலச்சங்க பொதுச்செயலாளர் சம்பூர்ணம் வரவேற்றார். வெள்ளி விழா மலர் மற்றும் சங்க அமைப்பு கையேட்டை வழக்கறிஞர் தயானந்தம் வெயிட தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க மாநிலத் தலைவர் ரவி பொற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இளைஞரணி தலைவர் ஜெயப்பிரகாஷ், சென்னை கே.ஆர்.டி., அகாடமி செல்வராஜி, தென்னிந்திய ரெட்டி ஜன சங்கத் தலைவர் முத்துமல்லா, செயலாளர் ரவிச்சந்திரன், சென்னை அனுஜ் டைல்ஸ் குமார், கடலுார் ஜெயச்சந்திரன், விழுப்புரம் (வடக்கு) ரெட்டி நலச்சங்க தலைவர் ரவிச்சந்திரன், புதுச்சேரி சுஜாதா சரவணன் வாழ்த்திப் பேசினர்.
இதில், கஞ்சம் ரெட்டி (பி.சி.,) சான்றிதழ் அனைத்து ரெட்டி இன மக்களுக்கு வழங்க வேண்டும். கஞ்சம் ரெட்டி சான்றிதழை ஓ.பி.சி.,யில் சேர்க்க வேண்டும். இ.டபிள்யூ.எஸ்., சான்றிதழ் அனைத்து தகுதியுடையவர்களுக்கும் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட தலைநகரமான விழுப்புரத்தில் ஓ.பி.ஆர்., முழு உருவச் சிலையை அரசு சார்பில் நிறுவ வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
