/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் தீ மிதி திருவிழா
/
திண்டிவனத்தில் தீ மிதி திருவிழா
ADDED : ஜூன் 25, 2024 07:24 AM

திண்டிவனம், : திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவத்தை முன்னிட்டு நடந்த தீ மிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலின் அக்னி வசந்த உற்சவம் கடந்த மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் 18ம் போர் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 7:00 மணியளவில் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து தீமிதித்தனர். நாளை தருமர் பட்டாபிேஷக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.