/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 08, 2024 11:24 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெற உழைப்பது.
மாவட்ட சார்பு அணிகளுக்கும், புதியதாக ஒன்றிய, நகர, பேரூராட்சி அளவில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமனம் செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், தயா இளந்திரையன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், 23 சார்பு அணிகளின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.