/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க., கூட்டணி பிரசார பேரணி
/
அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க., கூட்டணி பிரசார பேரணி
அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க., கூட்டணி பிரசார பேரணி
அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க., கூட்டணி பிரசார பேரணி
ADDED : ஏப் 17, 2024 11:45 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தி.மு.க., கூட்டணி சார்பில், வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பொன்முடி தலைமையில் இறுதி கட்ட பிரசார பேரணி நேற்று மாலை நடந்தது.
விழுப்புரம் ரயிலடியில் இருந்து மாலை 4.30 மணிக்கு பிரசார பேரணி தொடங்கியது.
ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் பொன்முடி, எம்.பி., கவுதம்சிகாமணி, எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், காங்., மாநில துணைத் தலைவர் குலாம்மொய்தின், மாவட்டத் தலைவர் சீனுவாசகுமார், மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, இந்திய .கம்யூ., மாநில குழு சரவணன், வி.சி., எம்.எல.ஏ., ஷானவாஸ், வி.சி., பொறுப்பாளர் குணவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், பானை சின்னத்துக்கு ஆதரவு திரட்டியபடி வந்தனர்.
இவர்கள், விழுப்புரம் நேருஜி சாலை, பூந்தோட்டம் பாதை, ரங்கநாத ரோடு, திருச்சி சாலை வழியாக 5.30 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை அடைந்தனர். தி.மு.க., காங்., ம.தி.மு.க., வி.சி, கம்யூ., த.வா.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், வாகனங்களில் திரண்டு வந்தனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பானையுடன் கலந்துகொண்டனர். நிறைவாக, அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி சிலைக்கு, பொன்முடி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து, பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

