/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., பேனர் கிழிப்பு அ.தி.மு.க., பிரமுகர் கைது
/
தி.மு.க., பேனர் கிழிப்பு அ.தி.மு.க., பிரமுகர் கைது
தி.மு.க., பேனர் கிழிப்பு அ.தி.மு.க., பிரமுகர் கைது
தி.மு.க., பேனர் கிழிப்பு அ.தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : மே 30, 2024 05:00 AM
செஞ்சி: செஞ்சியில் கருணாநிதி பிறந்த நாளுக்காக தி.மு.க.,வினர் வைத்திருந்த பேனரை கிழித்த அ.தி.மு.க., இளைஞர் பாசறை பொருளாளரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சியில் தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் அமைச்சர் மஸ்தான் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை சாலையில் திருமண மண்டபம் ஒன்றின் அருகே வைத்திருந்த டிஜிட்டல் பேனர் நேற்று காலை கழிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் செஞ்சி பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., இளைஞர் பாசறை பொருளாளர் பிரகாஷ் 25; என்பவர் பேனர்களை கழித்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.