/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர்கள் மீது தவறான தகவல் போலீசில் தி.மு.க.,வினர் புகார்
/
அமைச்சர்கள் மீது தவறான தகவல் போலீசில் தி.மு.க.,வினர் புகார்
அமைச்சர்கள் மீது தவறான தகவல் போலீசில் தி.மு.க.,வினர் புகார்
அமைச்சர்கள் மீது தவறான தகவல் போலீசில் தி.மு.க.,வினர் புகார்
ADDED : ஜூன் 02, 2024 04:40 AM

திண்டிவனம்: அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தி.மு.க., அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், பெரியசாமி, மஸ்தான் ஆகியோர் படத்தின் கீழ், பொன்முடியை தொடர்பு படுத்திய வாசகங்களுடன் கூடிய தகவல் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் பகுதி சமூக வலைதளங்களில் பரவியது.
அதில், அமைச்சர் பொன்முடி மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கக் கூடாது என குறிப்பிட்டு, அதில் மஸ்தானுக்கு ஆதரவாக மற்ற அமைச்சர்கள் உள்ளது போல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் என இரு கோஷ்டிகளாக செயல்படும் நிலையில், சமூக வலைதளத்தில் வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள் திண்டிவனம், ரோஷணை, மயிலம், பெரியதச்சூர் உட்பட 7 போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்துள்ளனர்.
அதில், தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கோபிநாத் திண்டிவனம் போலீசில் அளித்துள்ள புகாரில், 'ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில், திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுக் கட்சி பிரமுகர், அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ரோஷணை போலீசில், வழக்கறிஞர் கமலக்கண்ணன், மயிலம் போலீசில் வழக்கறிஞர் கன்னியப்பன் புகார் கொடுத்துள்ளனர்.
புகார் குறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கேட்டபோது, புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லை என்றனர்.