ADDED : ஜூன் 09, 2024 04:40 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் த.மு.மு.க., சார்பில் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ., மாநில செயலாளர் முஸ்தகத்தின், மனிதநேய வர்த்தக மாநில பொருளாளர் அப்துல் ஹக்கீம், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை துணைச் செயலாளர் சையது பாத்திமா கண்டன உரையாற்றினர்.
நகர தலைவர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாமியாளம் ராவுத்தர் வரவேற்றார். மாவட்ட தலைவர் அஸ்கர்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேல் நாட்டை கண்டித்தும் பேசினர்.