/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பலம் குறைந்த கிளைகளில் கவனம் செலுத்தும் தி.மு.க.,
/
பலம் குறைந்த கிளைகளில் கவனம் செலுத்தும் தி.மு.க.,
ADDED : ஏப் 05, 2024 11:44 PM
வானுார் : வானுார் சட்டசபை தொகுதியில் பலவீனமாக உள்ள கிளைகளை கண்டறிந்து, கூடுதல் கவனம் செலுத்த தி.மு.க.,வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் கடந்த முறை தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் இந்த முறையும் களம் காண்கிறார். இந்த முறை தி.மு.க.,விற்கு சீட் ஒதுக்க வேண்டும் என தி.மு.க.,வினர் தலைமையிடம் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் தலைமை திடீரென மூன்று சீட் கேட்டு, அடம் பிடித்த வி.சி.,க்கு, விழுப்புரம் தொகுதியை மீண்டும் கொடுத்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த, மாவட்ட தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சில பகுதிகளில் உள்ள தி.மு.க.,வினர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதை வெளிகாட்டாமல், தோளோடு தோளாக கூட்டணிக்கு பணியாற்றி வருகின்றனர். அதே சமயம் வானுார் சட்டசபை தொகுதியில் தி.மு.க.,வில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, கூட்டணி வேட்பாளருக்கு ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இருப்பினும், சில பகுதிகளில், தி.மு.க.,வினர் தேர்தல் பணியாற்றாமல் மந்தமாக இருந்து வருகின்றனர். தேர்தல் பணியில் வேகம் காட்டாமல் இருக்கும் கிளைகளை கண்டறிந்து, அந்த பகுதியில் கவனம் செலுத்தி கூடுதல் ஓட்டு பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதனால், ஒன்றிய செயலாளர்கள், அந்தந்த பகுதியில் உள்ள கிளைச் செயலாளர்களை தனியாக சந்தித்து, பேசிஅவர்களையும் தீவிர தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளனர்.

