/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : மார் 12, 2025 07:39 AM

திருவெண்ணெய்நல்லுார்,: திருவெண்ணெய்நல்லுாரில் தி.மு.க., இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன், ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் முருகன், இளந்திரையன், கற்பகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிர்மல்ராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மேன் ஓம்சிவசக்திவேல், நகர செயலாளர் கணேசன் வரவேற்றனர்.
அமைச்சர்கள் பொன்முடி, செழியன், தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி ஆகியோர், இந்தி திணிப்பு, நிதி பகிர்வால் பாரபட்சம், தொகுதி மது சீரமைப்பில் அநீதி கண்டித்து கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கிருஷ்ணராஜ், கவுன்சிலர்கள் செந்தில் முருகன், சதாம், பாபு, பாக்யராஜ், நகர கழக நிர்வாகிகள் சுலைமான், சிறுவாமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு நன்றி கூறினார்.