/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., மகளிர் நலனுக்கான அரசு அமைச்சர் பொன்முடி பேச்சு
/
தி.மு.க., மகளிர் நலனுக்கான அரசு அமைச்சர் பொன்முடி பேச்சு
தி.மு.க., மகளிர் நலனுக்கான அரசு அமைச்சர் பொன்முடி பேச்சு
தி.மு.க., மகளிர் நலனுக்கான அரசு அமைச்சர் பொன்முடி பேச்சு
ADDED : ஜூன் 27, 2024 11:38 PM

விக்கிரவாண்டி:மகளிர் நலன் காக்கும் அரசாக தி.மு.க., உள்ளது என அமைச்சர் பொன்முடி பேசினார்.
காணை தெற்கு ஒன்றியம், வைலாமூர், குப்பம் காணை, கருங்காலி பட்டு, புதுப்பாளையம் வீரமூர் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் பொன்முடி, வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஓட்டு கேட்டு பேசுகையில், 'பெண்கள் நலன் காக்கும் அரசாக தி.மு.க., அரசு உள்ளது. மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து அனைத்து பதவிகளிலும் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.
மேலும் தொகுதிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் செய்திட உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டுகிறேன்' என்றார்.
முன்னதாக புதுப்பாளையத்தில் தேர்தல் அலுவலகத்தை பாரதி திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், லட்சுமணன் எம்.எல்.ஏ., சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், இளைஞரணி துணை அமைப்பாளர் அரங்கநாதன், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், நிர்வாகிகள் காமராஜ், விஜயகுமார், விஜயராஜ், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.