/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் பிறந்த நாள் விழாவை ஹிந்தி எதிர்ப்பு பிரசாரமாக்கிய தி.மு.க.,வினர்
/
முதல்வர் பிறந்த நாள் விழாவை ஹிந்தி எதிர்ப்பு பிரசாரமாக்கிய தி.மு.க.,வினர்
முதல்வர் பிறந்த நாள் விழாவை ஹிந்தி எதிர்ப்பு பிரசாரமாக்கிய தி.மு.க.,வினர்
முதல்வர் பிறந்த நாள் விழாவை ஹிந்தி எதிர்ப்பு பிரசாரமாக்கிய தி.மு.க.,வினர்
ADDED : மார் 11, 2025 06:16 AM
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கையை கொண்டதாக உள்ளதால், அதை பின்பற்ற முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக பா.ஜ.,மும்மொழிக்கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் பொது மக்களிடம் நடத்தி, ஹிந்தியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
பா.ஜ.,விற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் பயன்படுத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாஜி அமைச்சர் மஸ்தான் கலந்து கொள்ளும் போது, நிகழ்ச்சி முடிவில்குறிப்பாக திண்டிவனம், மயிலம், ஒலக்கூர், வெள்ளிமேடுப்பேட்டை, உள்ளிட்ட பல இடங்களில், கலந்து கொள்ளும் தி.மு.க.,வினர் மற்றும் பொது மக்களிடம், வலது கையை உயர்த்தி பிடித்து, ஹிந்திக்கு எதிராக உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியை தவறாமல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் முதல்வர் பிறந்த நாள் விழாவிற்கு கூட்டம் நடத்தியமாதிரி இருக்கும். ஒரு பக்கம் ஹிந்தியை எதிர்த்து பிரச்சாரம் செய்தது போல் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் செயல்பட்டனர்.